கனடாவில் ஈழத்தின் பிரபல பாடகர் கொரோனாத் தொற்றால் உயிரிழப்பு!

புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்து வந்த பிரபல பாடகர் வர்ண இராமேஸ்வரன் கொரோனாத் தொற்றினால் நேற்று காலமானார்.

அண்மையில் யாழ்ப்பாணம் வந்து கனடா திரும்பிய நிலையில் அவர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியிருக்கின்றார்.

கனடாவில் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனாத் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

முறையாக சங்கீதம் கற்றுத் தேர்ந்த புகழ்பெற்ற இலங்கையின் குரலிசைக் கலைஞர்களில் முன்னணியில் ஒருவராக வர்ண இராமேஸ்வரனும் விளங்கிவந்துள்ளார்.

புலம்பெயர்வுக்கு முன்பாக இலங்கையிலும் புலம்பெயர்ந்த பின்னர் புலம்பெயர் நாடுகளிலும் ஆயிரக்கணக்கான அரங்குகளில் குரலிசை மூலம் தன்னுடைய ஆற்றலை வெளிப்படுத்தியிருக்கின்றார்.

பல நூற்றுக்கணக்கான பக்திப்பாடல்கள், விடுதலைப் போராட்டத்தின் போதான எழுச்சிப் பாடல்களையும் அவர் பாடியுள்ளார்.
Previous Post Next Post