யாழில் இளம் யுவதி தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!


யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சுழிபுரம் பகுதியில் வசித்து வந்த இளம் யுவதி ஒருவர் நேற்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆடை தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் யுவதியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே இந்த விபரீத முடிவை குறித்த யுவதி எடுத்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

சம்பவத்தில் ஜெகதீஸ்வரன் டினுசியா (வயது 19) என்ற யுவதியே உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post