(02 ஆம் இணைப்பு)கீரிமலைக் கடலில் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட இளைஞன் சடலமாக மீட்பு! (படங்கள்)


இரண்டாம் இணைப்பு

கீரிமலை கடலில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சுமார் இரண்டரை மணிநேர தேடலின் பின்னர் சடலம் மீட்கப்பட்டது.

முதலாம் இணைப்பு

அந்தியெட்டிக் கிரியைக்காக கீரிமலைக்கு சென்ற இளைஞன் உறவினர்களுடன் கடலில் குளித்த வேளை அலையில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமற்போயுள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று நண்பகல் இடம்பெற்றது.

சம்பவத்தில் யாழ்ப்பாணம் கலட்டியைச் சேர்ந்த சூரியகாந்தன் சஞ்சீவன் (வயது-18) என்பவரே கடலில் அலையில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

உறவினர்களுடன் அந்தியட்டிக் கிரியைக்காக சென்ற இளைஞர்களில் நால்வர் கடலில் குளித்துள்ளனர். அதன்போதே ஒருவர் அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

இளைஞனை தேடும் பணியை காங்கேசன்துறை பொலிஸாரின் அழைப்பில் கடற்படையினர் முன்னெடுத்துள்ளனர்.

Previous Post Next Post