யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்குள் பஸ் மோதி பெண் உயிரிழப்பு!


யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தினுள் இடம்பெற்ற பேருந்து விபத்தில் வயோதிபப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று காலை நுழைந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து, பேருந்து நிலைய வளாகத்தினுள் நின்ற வயோதிப பெண்ணொருவரை மோதி விபத்துக்கு உள்ளானது.

விபத்தில் படுகாயமடைந்த வயோதிப பெண்ணை அங்கிருந்தவர்கள் மீட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் குறித்த வயோதிப பெண்ணுக்கு அதிதீவிர சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும், சிகிச்சை பயனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

உடற்கூற்றுப் பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை சவ அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Previous Post Next Post