யாழில் 15 வயதுச் சிறுமியை வீடொன்றுக்குள் அழைத்துச் சென்று வன்புணர்ந்த இரு இளைஞர்கள் கைது!


பதின்ம வயதுச் சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் பருத்தித்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை பேருந்து நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை அதிகாலை 4 மணியளவில் தனித்து நின்ற 15 வயதுச் சிறுமியை பொலிஸ் காவலில் எடுத்துப் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் உள்ள வீடொன்றுக்கு நேற்றுமுன்தினம் இரவு அழைத்துச் செல்லப்பட்ட சிறுமி, இருவேறு நேரங்களில் 2 இளைஞர்களினால் வன்புணர்வுக்கு உள்படுத்தப்பட்டுள்ளார் என்று பொலிஸார் கூறினர்.

பாதிக்கப்பட்ட சிறுமி சட்ட மருத்துவ வல்லுநரின் மருத்துவ அறிக்கைக்காக பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

19 மற்றும் 24 வயதுடைய சந்தேக நபர்கள் இருவரும் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.
Previous Post Next Post