பிரான்ஸ், பாரிஸின் பல இடங்களில் மாஸ்க் கட்டாயமாகின்றது! பொலிஸ் தலைமையகம் அறிவிப்பு!!


  • குமாரதாஸன், பாரிஸ்.
பாரிஸ் விமான நிலையங்களிலும் அவற்றின் சூழலிலும் மாஸ்க் அணிந்து நடமாடுவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. றுவாஸி-சாள்-து-ஹோல் (Roissy-Charles-de-Gaulle), லூ பூஜே (Le Bourget) மற்றும் பாரிஸ் ஒர்லி(Paris-Orly) ஆகிய விமான நிலையங்களிலேயே உள்ளேயும் வெளியேயும் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டிருப்பதாக பொலீஸ் தலைமையகம் அறிவித்திருக்கிறது.

சிறுவர்கள், வலுக்குறைந்தோர் தவிர ஏனைய பயணிகளுடன் வழியனுப்ப வருகின்றவர்களை முனையங்களுக்குள் (terminal) அனுமதிப்பது தடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதேவேளை, பாரிஸ் பிராந்தியத்தில் பொது நிகழ்வுகள், பேரணிகள், சந்தைகள், பழைய பொருள் விற்பனைச் சந்தைகள்,வர்த்தகக் கண்காட்சிகள், வெளிப்புறகலை நிகழ்வுகள், பாடசாலைகளது வெளிப் புறங்கள், நுழைவு மற்றும் வெளியேறும் இடங்கள்,வணக்க ஸ்தலங்களின் வாயில்கள் போன்றவற்றிலும் மாஸ்க் அணிந்திருப்பது கட்டாயம் என்பதை பாரிஸ் பொலீஸ் தலைமையகம் (Paris Police Prefecture) பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
Previous Post Next Post