பிரித்தானியாவில் மீண்டும் வேகம் எடுக்கும் கொரோனா! ஆபத்து நிறைந்த பகுதிகளின் பெயர் விபரங்கள் இணைப்பு!!


பிரித்தானியாவில் கோவிட் தொற்று மீண்டும் வேகமாக பரவி வரும் நிலையில், லண்டனில் கோவிட் தொற்றின் ஆபத்து நிறைந்த பகுதிகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி, சுட்டன் மற்றும் ரிச்மண்ட் ஆகிய பகுதிகளில் கோவிட் தொற்றின் ஆபத்து தீவிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய உத்தியோகபூர்வ கோவிட் புள்ளிவிவரங்களின்படி, குறித்த இரண்டு பகுதிகளிலும் 100,000 பேரில் 400க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுட்டனில் இந்த எண்ணிக்கை 404.4 என்ற வீதத்திலும், ரிச்மண்டில் இந்த எண்ணிக்கை 401.2 வீதமாகவும் பதிவாகியுள்ளது.

எவ்வாறாயினும், வெஸ்ட்மின்ஸ்டர் மற்றும் சவுத்வார்க் பகுதிகளில் மிகக்குறைந்தளவான கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, வெஸ்ட்மின்ஸ்டரில் 166.4 என்ற வீதத்திலும், சவுத்வார்க் 174.7 என்ற வீதத்திலும் கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன.

ஏனைய பெருநகரங்களில் உள்ள கோவிட் வழக்கு எண்கள் லண்டன் முழுவதும் ஒரு கலவையான வீதத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, லண்டனில் புலம்பெயர் தமிழர்கள் அதிகளவாகவர்கள் வசித்து வரும் நிலையில், கோவிட் தொற்று குறித்து மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வலுப்பெற்றுள்ளது.

குறிப்பாக பைசர், அஸ்ட்ராசெனிகா உள்ளிட்ட தடுப்பூசிகளுக்கும் கட்டுப்படாத 'ஏ.30' (A.30) என்ற புதிய வைரஸ் பிறழ்வு தொடர்பில் கடும் அச்சம் வெளியிடப்பட்டுள்ள பின்னணியில் இந்த கோரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இங்கிலாந்தின் கோவிட் ஆர் (R) எண் 0.9 மற்றும் 1.1 க்கு இடையில் வீழ்ச்சியடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது நாட்டில் கோவிட் பரவல் குறைந்து வருவதை காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த மதிப்பீடு 1.1 மற்றும் 1.3 என்ற ரீதியில் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

லண்டனில் கொரோனா ஆபத்து நிறைந்த பகுதிகள்.........
 • Sutton 404.4
 • Richmond upon Thames 401.2
 • Kingston upon Thames 377.4
 • Hounslow 347.0
 • Barnet 343.4
 • Havering 322.7
 • Merton 312.4
 • Bexley 310.1
 • Hillingdon 309.4
 • Harrow 302.4
 • Redbridge, 294.1
 • Ealing 282.4
 • Hammersmith and Fulham 279.5
 • Bromley 271.1
 • Enfield 262.9
 • Waltham Forest 259.3
 • Barking and Dagenham 259.2
 • Wandsworth 253.2
 • Croydon 243.7
 • Brent 234.9
 • Haringey 225.3
 • Greenwich 223.5
 • Kensington and Chelsea 221.8
 • Hackney and City of London 210.4
 • Lewisham 210.0
 • Islington 205.1
 • Lambeth 201.7
 • Tower Hamlets 194.9
 • Camden 191.8
 • Newham 190.6
 • Southwark 174.7
 • Westminster 166.4
Previous Post Next Post