வடமாகாண பாடசாலைகளுக்கு வெள்ளியன்று விடுமுறை!


வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை சிறப்பு விடுமுறை வழங்க மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா பணித்துள்ளார்.

வடக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு இதுதொடர்பான அறிவுறுத்தலை அவர் இன்று வழங்கியுள்ளார்.

நாளை வியாழக்கிழமை இந்துக்களின் தீபாவளி பண்டிகை இடம்பெறுவதால் பொது விடுமுறை நாளாகும். அதனால் மறுநாள் வெள்ளிக்கிழமையும் பாடசாலைகளுக்கு சிறப்பு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

நாளைமறுதினம் சிறப்பு விடுமுறை வழங்கப்படுவதனால் பதில் நாளாக வரும் நவம்பர் 13ஆம் சனிக்கிழமை பாடசாலைகள் இடம்பெறும் என்று மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார்.
Previous Post Next Post