யாழில் மோட்டார் சைக்கிள் விபத்து! சிகிச்சை பலனின்றி ஆசிரியர் உயிரிழப்பு!!


மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்திருந்த தென்மராட்சி - மீசாலையைச் சேர்ந்த ஆசிரியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ். தென்மராட்சி, மீசாலை - புத்தூர் சந்தியில் கடந்த 28ஆம் திகதி இரு மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்டதில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றிருந்தது.

இதன் போது விபத்துக்குள்ளான மீசாலையை சேர்ந்த க.சுதாகரன் (வயது-36) என்பவர் படுகாயத்திற்குள்ளாகியிருந்தார்.

இதையடுத்து உடனடியாக மீட்கப்பட்டு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

இந்நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிக்ச்சை பலனின்றி நேற்று (டிச-08) மாலை உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post