யாழில் மாங்காய் பறிக்க மரத்தில் ஏறி தவறி விழுந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

மாங்காய் பிடுங்கும்போது தவறி விழுந்த குடும்ப தலைவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் மீண்டும் சுகயீனமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோதும் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் ஊர்காவற்றுறை - கரம்பொன் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான அல்போன்ஸ் ஞானரூபன் (வயது 56) என்பவரே நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார்.
Previous Post Next Post