யாழ். வடமராட்சிக் கடற்பரப்பில் காணாமல் போன இரு மீனவர்களில் ஒருவரின் சடலம் மீட்பு!


இந்திய இழுவைப்படகுகள் மோதியதால் கடலில் வீழ்ந்து காணாமல் போயிருக்கலாம் என்ற சந்தேகத்தில் தேடப்பட்டுவந்த வடமராட்சி கிழக்கு மீனவர்கள் இருவரில் ஒருவரின் சடலம் நண்பகல் கரையொதுங்கியுள்ளது.

கடந்த நான்கு நாட்களாக குறித்த மீனவர்கள் பயணித்த படகின் எச்சங்கள் கடலில் மிதந்த நிலையில் அதில் பயணித்த மீனவர்கள் இருவரும் தேடப்பட்டுவந்தனர்.

இந்நிலையில் அவர்கள் இருவரில் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.

அண்மைய நாட்களாக இந்திய மீனவர்களின் அத்துமீறலுடன் யாழ்ப்பாணம் மீனவர்களை கொலை செய்யும் முயற்சிகளும் ஆங்காங்கே இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post