யாழில் உழவியந்திரச் சில்லுக்குள் சிக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு! (படங்கள்)


யாழ்ப்பாணம் - புத்தூர் பகுதியில் இரு சக்கர உழவு இயந்திரத்தில் உழுது கொண்டிருந்த குடும்பஸ்தர் உழவு இயந்திரம் புரண்டதில் சில்லுக்குள் நசியுண்டு உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று மதியம் தோட்ட நிலத்தை உழுதும் போது இடம் பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் புத்தூர் - கலைமதி பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான சின்னதம்பி தெய்வேந்திரன் என அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள அதே வேளை மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post