நாளை பகல் சுழற்சிமுறையில் 3 மணிநேர மின்வெட்டு!

நாளை காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை அனைத்து பிரிவினருக்கும் மூன்று மணி நேர மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஆனால், மின் தேவையை நிர்வகிப்பதற்கு, இரவு நேரத்தில் தேவைப்பட்டால், 30 நிமிட திட்டமிடப்படாத மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படலாம் என்றும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, மின்சாரத் தேவை அதிகளவில் காணப்படும் பிரதேசங்களில் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மின்சாரத்தை முடிந்தவரை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

Previous Post Next Post