யாழில் திடீரென மயங்கி விழுந்த இளைஞன் உயிரிழப்பு!


யாழ்.கரவெட்டி - பகுதியில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த இளைஞன் திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று மாலை (05-02-2022) சனிக்கிழமை யாழ்.கரவெட்டியில் இடம்பெற்றுள்ளது.

மேலும் இவ்வாறு உயிரிழந்தவர் தேசிய சேமிப்பு வங்கி காவல் அதிகாரியான கரவெட்டி – கலட்டி கீரிப்பல்லி பகுதியை சேர்ந்த, 26 வயதுடைய விக்கினேஸ்வரமூர்த்தி நிதர்சன் என தெரிவிக்கப்டுகின்றது.

இச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரிக்கு முன்பாகவுள்ள, நுகவில் வயலில் தனது சகோதரருடன் வேலை செய்து கொண்டிருந்த போது, திடீரென்று மயக்கமுற்று நிலத்தில் வீழ்ந்துள்ளார்.

அதனையடுத்து, உடனடியாக, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு, இளைஞர் கொண்டு செல்லப்பட்ட போதும், வழியில் உயிர் பிரிந்துள்ளது. அவருக்கு, உடனடியாகவே அன்ரிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில், பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நெல்லியடி பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Previous Post Next Post