அதிகரித்துவரும் போராட்டங்களின் தொடராக நாட்டில் அவசரகால நிலைமையை பிரகடனப்படுத்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நேற்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அரச வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
அவசரகால சட்டத்தின் மூலம் பிடியாணையின்றி கைதானோரை காவலில் வைக்கவும் - சொத்துக்களை முடக்கவும் - எந்தவோர் - இடத்திலும் நுழைந்து சோதனை செய்வதற்கும் - கூட்டங்களை இடைநிறுத்துவதற்கும் நீதிமன்றால் கேள்வி கேட்க முடியாத உத்தரவுகளை பிறப்பிக்கவும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்படும் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.