யாழில் விபத்து! ஒருவர் உயிரிழப்பு!!

வேக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் மந்திகையைச் சேர்ந்த அருந்தவராசா அஜந்தன் என்பர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

கொடிகாமம் பருத்தித்துறை பிரதான வீதியில் வடவரணி கறுக்காயில் இவ் விபத்து சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது.

சடலம் மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Previous Post Next Post