தந்தையை இழந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் துவிச்சக்கர வண்டி வழங்கி வைப்பு! (படங்கள்)

கிளிநொச்சி இந்நுத் கல்லூரியில் கல்வி பயிலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் துவிச்சக்கர வண்டி என்பன வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 

அண்மையில் தந்தையை இழந்து குறித்த மாணவர்கள்  கல்வி கற்பதற்கு வீட்டில் இருந்து பாடசாலைக்கு வருவதற்கு எந்த உதவியும் இல்லாமல் பெரும் அசெளகரியங்களை எதிர் கொண்டு வருகிறார்கள்.

அவர்களின் கல்வி நடவடிக்கைகள் தங்கு தடையின்றி மேற்கொள்ளும் வகையில் பாடசாலை அதிபர்  மற்றும் நல்லூர் பிரதேச சபையின் உறுப்பினர் தெய்வேந்திரம் கிரிதரன் அவர்களின் ஊடாக புலம்பெயர் உறவான மகேஸ்வரன் தனேசன் அவர்களின் நிதி பங்களிப்பில் இந்த உதவி திட்டம் வழங்கி வைக்கப்பட்டது.
Previous Post Next Post