மின்சாரம் தாக்கி 4 வயது சிறுமி பலி!

கிளிநொச்சி பகுதியில் வீட்டில் இருந்த ‘பிளக்கில்’ கைபிடியற்ற ‘ஸ்குரு ட்ரைவரை’ (screwdriver) செலுத்திய 4 வயதுச் சிறுமி மின்தாக்கியதில் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிளிநொச்சி முழங்காவில், வெள்ளாங்குளம் பகுதியில் கடந்த 30ம் திகதி இந்தச் சம்பவம் நடந்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அன்ரன் ஜினேசன் ஜினேஜினி என்ற 4 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்தார்.

ஸ்குரு ட்ரைவர் ஊடக மின் தாக்கியதில் சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறுமியின் உடல் கிளிநொச்சி மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக கிளிநொச்சிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Previous Post Next Post