அடுத்த வாரம் பாடசாலைகள் நடைபெறாது!

நாளை ஜூலை 4 முதல் ஜூலை 8ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரையான வாரத்தில் அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் இடம்பெறாது என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி நிலையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களில் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகையின் முன்னேற்றம் குறித்து ஆராய்ந்த பின்னர், கல்வி அமைச்சின் அதிகாரிகள், மாகாணக் கல்விச் செயலாளர்கள் மற்றும் மாகாணக் கல்விப் பணிப்பாளர்களுடன் சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக இன்று நடைபெற்ற கலந்துரையாடலில், மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சில் எரிபொருள் விநியோகம் குறித்த அறிவிப்புகள் மேலும் கவனத்தில் கொண்டு, 04.07.2022 முதல் 08.07.2022 வரையிலான வாரம் நாடுமுழுவதும. உள்ள அனைத்து அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு விடுமுறை வாரமாக அறிவிக்கப்படும்.

இந்த வாரத்தில் பாடசாலை நேரம் இழக்கப்பட்டால், அடுத்த பாடசாலை விடுமுறை காலத்தில் ஈடுசெய்யப்படும் என்று கல்வி அமைச்சின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post