ஊசி மூலம் போதைப் பொருள் பாவனை! யாழில் பூசகர் உயிரிழப்பு!!

ஊசிமூலம் ஹெரோயின் போதைப்பொருள் எடுத்துக் கொண்ட பூசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கல்வியங்காடு பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய பூசகரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்றுமாலை திருநெல்வேலியில் உள்ள உறவினர் வீடொன்றுக்குச் சென்ற அவர் திடீரென உயிரிழந்தார் என்று பொலிஸ் விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் அவரது சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்றுப் பரிசோதனையில் கையில் ஊசிமூலம் ஹெரோயின் போதைப்பொருளை ஏற்றியதால் உயிரிழப்பு ஏற்பட்டது என்று அறிக்கையிடப்பட்டுள்ளது.
Previous Post Next Post