
இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சடலம் மீதான மரண விசாரணை, திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சடலத்தை உரியவர்கள் அடையாளம் காட்டுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணின் சடலம் 4 அடி 5 அங்குலம் உயரமுடைய தோற்றத்துடன், பச்சை நிற சேலை அணிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
