யாழ்.அல்லைப்பிட்டியில் பிறந்து 42 நாட்களேயான குழந்தை உயிரிழப்பு!

பிறந்து 42 நாட்களான குழந்தை திடீர் சுகயீனமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது.

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரத்தை சேர்ந்த ராயதீபன் டேனுஜன் என்ற பிறந்து 42 நாட்களேயான குழந்தையே உயிரிழந்துள்ளத.

நேற்றுமுன்தினம் இரவு தாயிடம் பால் குடித்துவிட்டு உறங்கிய குழந்தைக்கு நேற்று அதிகாலை வாய் மற்றும் மூக்கால் இரத்தம் வடிந்துள்ளதை பெற்றோர் பார்த்துள்ளனர்.

உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலையில் குழந்தையை சிகிச்சைக்காக அனுமதித்தபோதும் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

மரணவிசாரணைகளை யாழ்.போதனா வைத்தியசாலையின் திடீர்மரணவிசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிறேமகுமார் மேற்கொண்டார்.
Previous Post Next Post