யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் வவுனியா காட்டுப் பகுதியில் சடலமாக மீட்பு! (படங்கள்)

வவுனியா பூவரசங்குளம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட கந்தன்குளம் காட்டுப் பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இன்றைய தினம் காவல்துறையினரால் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

யாழ்ப்பாணம் மல்லாகத்தை நிரந்தர வதிவிடமாக கொண்ட ஜெயந்தகுமார் என்ற நபர் வவுனியா கந்தன்குளத்திலுள்ள உறவினர் வீட்டிற்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்னரே வந்து தங்கியிருந்து அங்குள்ள காணியினை பராமரித்து வந்துள்ளார்.

இவ்வாறான நிலையில், குடும்பத்தினர் குறித்த நபரை கடந்த 14 ஆம் திகதியிலிருந்து தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் தொடர்பு கொள்ள முடியாமல் போனதையடுத்து, அவரது மனைவி நேரில் வந்து தேடியும் கணவன் கிடைக்காததால், பூவரசங்குளம் காவல் நிலையத்தில் நேற்றைய தினம் முறைப்பாட்டினை பதிவு செய்திருந்தார்.

அவரின் முறைப்பாட்டிற்கமைய கந்தன்குளம் பகுதியில் காவல்துறையினர் இன்று தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட போது காட்டுபகுதியில் நாட்டுத்துப்பாக்கியுடன் சடலமாக காணப்பட்டுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் மல்லாகத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 48 வயதுடைய அச்சுதநாயகர் ஜெயந்தகுமார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபரின் உயிரிழப்பு கொலையா? அல்லது வேட்டைக்கு சென்ற போது ஏதாவது நடந்திருக்குமா? எனப் பல்வேறு கோணத்தில் பூர்வாங்க விசாரணைகளை பூவரசங்குளம் காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
Previous Post Next Post