யாழ்.போதனா வைத்தியசாலைக்கு நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தினால் நிதியுதவி!

யாழ்.போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை கூடத்திற்கு தேவையான புதிய உபகரணம் ஒன்றை வாங்குவதற்கான நிதி யாழ்.நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தினால் வழங்கப்பட்டது.

எலும்பு முறிவு சத்திர சிகிச்சைப் பிரிவின் தேவைக்காக ஒன்பது இலட்சத்து எழுபத்தையாயிரம் ரூபா [975,000/-] பெறுமதியான குறித்த உபகரணத்தை கொள்வனவு செய்யத்தேவையான நிதியினை நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய அறங்காவலர் சபையினால் வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளர் டாக்டர் யமுனானந்தாவிடம் கடந்த 17ஆம் திகதி கையளித்துள்ளனர்.
Previous Post Next Post