இலங்கை அகதிகள் இருவர் வியட்நாமில் உயிர்மாய்க்க முயற்சி! ஒருவர் ஆபத்தான நிலையில்...!

வியட்நாமில் அகதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகளில் இருவர் விபரீத முடிவு எடுத்து உயிர்மாய்க்க முயற்சித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் நேற்றிரவு உயிர்மாய்க்க முயற்சித்ததாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு முயற்சித்தவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், மற்றுமொருவரின் நிலைமை வழமைக்கு திரும்பியுள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த 306 இலங்கையர்கள் உரிய விஸா நடைமுறைகளின் பிரகாரம் மியன்மார் சென்று அங்கிருந்து கப்பல் ஒன்றின் மூலம் சட்டவிரோதமான முறையில் அகதிகளாக கனடா நோக்கி செல்ல முயற்சித்திருந்தனர்.

இதேவேளை தங்களை இலங்கைக்கு மீள அனுப்பும் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்ற நிலையில் தாம் அங்கு செல்ல தயார் இல்லை என தெரிவித்தே தற்கொலை முயற்சியை மேற்கொண்டமை குறிப்பிடதக்கது.
Previous Post Next Post