வெளிநாடு செல்லவிருந்த யாழ். பருத்தித்துறை இளைஞனும் வவுனியா விபத்தில் உயிரிழப்பு!

வவுனியா – நொச்சிமோட்டையில் இன்று அதிகாலை இடம்பெற்ற பஸ் விபத்தில் வெளிநாடு செல்லவிருந்த இளைஞர் ஒருவரும் சாவடைந்துள்ளார்.

பருத்தித்துறை, இன்பர்சிட்டியைச் சேர்ந்த இராமலிங்கம் நிதர்சன் (வயது 25) என்ற இளைஞரே மரணமடைந்தவராவார்.

வெளிநாட்டுப் பயண ஏற்பாட்டுக்காக குறித்த பஸ்ஸில் பருத்தித்துறையிலிருந்து கொழும்பு சென்ற வேளையிலேயே விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

இந்த பஸ் விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்: 

உயிரிழந்தவர்களின் விபரம்
  • சாரதியான கோவிலடி, உடுப்பிட்டி, வல்வெட்டித்துறையைச் சேர்ந்த எஸ்.சிவரூபன் (வயது 32)
  • யாழ். பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மாணவியான நாவலப்பிட்டிய பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் சயாகரி (வயது 23)
  • தம்பசிட்டி, பருத்தித்துறையைச் சேர்ந்த இராமலிங்கம் நிதர்சன் (வயது 24) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
Previous Post Next Post