வவுனியா விபத்தில் யாழ்.பல்கலைக்கழக மாணவியும் உயிரிழப்பு! உயிரிழந்தவர்களின் விபரம் வெளியாகியது!! (படங்கள்)

வவுனியா பேருந்து விபத்தில் உயிரிழந்த மூவரின் யெர் விபரங்கள் வெளியாகியுள்ளன.

குறித்த விபத்தில் மூவர் மரணமடைந்ததுடன், 16 பேர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 4 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்தில் யாழ். பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மாணவியான நாவலப்பிட்டிய பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் சயாகரி (வயது 23), சாரதியான கோவிலடி, உடுப்பிட்டி, வல்வெட்டித்துறையைச் சேர்ந்த எஸ்.சிவரூபன் (வயது 32), தம்பசிட்டி, பருத்தித்துறையைச் சேர்ந்த இராமலிங்கம் நிதர்சன் (வயது 24) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி: 
Previous Post Next Post