பிரான்ஸில் பாஸ்மதி அரிசியில் நஞ்சு! உடனடியாக திரும்பி வழங்க உத்தரவு!!

பிரான்ஸில் உள்ள லிடில் நிறுவனத்திடம் கொள்முதல் செய்யப்பட்ட பாஸ்மதி அரிசி திருப்பி வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அதாவது, குறித்த நிறுவனத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ள கோல்டன் சன் என்ற பாஸ்மதி அரிசியை கொள்முதல் செய்தவர்கள் உடனடியாக குறித்த நிறுவனத்திடம் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அரச தரப்பு விடுத்த அறிக்கையில், உணவில் நச்சுத் தன்மையை ஏற்படுத்தும் வைரஸ் இருப்பதாகவும், இதனால் வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் எடை குறைதல் போன்ற அறிகுறிகள் இருக்கும் என்றும் அத்துடன் கல்லீரலை அது பாதிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

எனவே குறித்த நிறுவனத்திடம் கொள்முதல் செய்த அரிசி உங்களிடம் இருக்கும் பட்சத்தில் உடனடியாக லிடில் நிறுவனத்திடம் ஒப்படைக்குமாறு அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
Previous Post Next Post