நடுவானில் மோதிக் கொண்ட விமானங்கள்! (நேரடிக் காட்சி)

அமெரிக்காவின் டெக்ஸாஸில் இடம்பெற்ற விமான கண்காட்சியின் போது இரண்டு விமானங்கள் ஒன்றுடனொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
போயிங் ரக பி-17 என்ற விமானம் ஒன்றும் சிறிய ரக விமானம் ஒன்றும் இவ்வாறு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இரண்டு விமானங்களையும் செலுத்தியவர்களின் நிலை இதுவரையில் கண்டறியப்படவில்லை.

அதிகாரிகள் உயிரிழப்புகளை உறுதிப்படுத்தவில்லை. எனினும், அறிக்கைகளின்படி குறைந்தது 6 பேர் விமானத்தில் இருந்தனர். அவர்கள் அனைவரும் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

அத்துடன் இரண்டாம் உலகப் போர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட விமானம் ஒன்று இதன் போது சேதமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் மீட்பு பணிகள் இடம்பெறுவதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Previous Post Next Post