இரு தரப்புக்கிடையில் மோதல்! ஒருவர் வெட்டிக் கொலை!! 2 பெண்கள் கைது!!!

களுத்துறை தெபுவன குலோடன் தோட்டத்தில் இரண்டு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட சண்டையில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

கோடாரி, வாள் மற்றும் இரும்பு கம்பியால் தாக்கி இந்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பாக இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேரை கைது செய்துள்ளதாகவும் தெபுவன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குலோடன் தோட்டத்தின் பழைய பிரிவின் நேபட பிரதேசத்தில் வசித்து வந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான கந்தசாமி பிரபாகரன் என்ற 40 வயது நபரே சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளார்.

இரண்டு தரப்பினருக்கு இடையில் நீண்டகாலம் இருந்து வரும் தகராறு காரணமாக நேற்றிரவு ஏற்பட்ட சண்டையில் இந்த கொலை நடந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட நபரின் தலை, கைகள்,கால்கள் உட்பட உடலில் சில இடங்களில் பல காயங்கள் இருப்பதை காணக்கூடியதாக இருந்து என பொலிஸார் கூறியுள்ளனர்.

கொலைக்கு பயன்படுத்திய வாள் ஒன்றை வீட்டின் சமையல் அறையில் மறைத்து வைத்திருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது. கோடாரி, இரும்பு கம்பி என்பன அருகில் உள்ள காட்டில் வீசப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றுள்ளன.

சம்பவம் தொடர்பாக களுத்துறை குற்றப்பிரிவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post