குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறினார் கோட்டாபய ராஜபக்ஷ!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் நால்வர் இன்று காலை அமெரிக்கா பயணமானதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் மனைவி அயோமா ராஜபக்ஷ, அவரது மகன், மருமகள் மற்றும் பேரப்பிள்ளை ஆகியோர் இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக வெளிநாடு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவிடம் இது குறித்து வினவியபோது, அமெரிக்கா செல்லும் தனது முடிவை மாற்றிக் கொண்டு கோட்டாபய டுபாயில் தங்கியிருப்பார் என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது குடும்பத்தினர் வெளிநாட்டு சுற்றுலா சென்றுள்ளதாகவும் உள்ளக தகவல் தரப்புகள் தெரிவிக்கின்றன.
Previous Post Next Post