பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல் தனது மூன்று பிள்ளைகளுக்கும் விசத்தைக் கொடுத்துத் தானும் விசம் அருந்தி தற்கொலைக்கு முயற்சித் தாய் காப்பற்றப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் நுவரெலியா மாவட்டம் வலப்பனை மத்துரட்ட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எலமுள்ள, மாரதுவெல என்ற இடத்தில் இடம் பெற்றுள்ளது.
25 வயதை கொண்ட இளம் தாய் ஒருவரே இச் செயலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் இம்மாதம் 12ம் திகதி இடம்பெற்றுள்ளதாக மதுரட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் அறிந்த அயலவர்கள் உடனடியாக தாய் மற்றும் பிள்ளைகள் மூவரையும் காப்பாற்றியதுடன் 119 அவசர பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு குறித்த தாயை சிகிச்சையின் பின் கைது செய்துள்ளனர்.
தனது கணவர் தன்னையும் பிள்ளைகளையும் கவனிப்பதில்லை, உண்ணுவதற்கு உணவு பொருட்கள் பெற்று தருவதில்லை, பிள்ளைகள் பாடசாலை அனுப்ப உபகரணங்கள் பெற்று தருவதில்லை இதனால் தொடர்ந்து பட்டினி சாவை எதிர்கொள்கின்றோம்.
இதனாலேயே நஞ்சருந்தி உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றதாக தாய் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
6 , 5 மற்றும் ஒரு வயது குழந்தைகளுக்கே குறித்த தாய் நஞ்சு கொடுத்துள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், தாய் மற்றும் பிள்ளைகளை வலப்பனை நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.