யாழில் 4 வயது மாணவனின் வாயில் நெருப்பால் சுட்ட ஆசிரியர்!


 
முன்பள்ளியில் கல்வி கற்றும் மாணவனின் வாயில் ஆசிரியர் ஒருவர் நெருப்பால் சுட்டதாக பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் சங்கானை பிரதேச செயலக சிறுவர் விவகார பிரிவில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இச் சம்பவம் யாழ்ப்பாணம்-துணவி பகுதியில் உள்ள முன்பள்ளியில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுவன் பிரதேச செயலகத்தினால் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுவன் தகாத வார்த்தை பேசியதாகக் கூறி தீக்குச்சியை எரிய வைத்து வாயிலும் நாடியிலும் சூடு வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து குறித்த ஆசிரியருக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சங்கானை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலர் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post