
இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 3.20 மணிக்கு இத்தீ விபத்து இடம்பெற்றதாக அறிய முடிகிறது. ஏழு அடுக்குகள் கொண்ட கட்டிடத்தில் திடீரென தீ பரவியுள்ளது. உடனடியாக தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டனர்.
தீ மிக வேகமாக பரவியது. இதில் 3 தொடக்கம் 15 வயதுக்குட்பட்ட ஐந்து சிறுவர்கள் உட்பட பத்து பேர் பலியாகியுள்ளனர்.
170 தீயணைப்பு படையினர் 65 தீயணைப்பு வாகனங்கள், காவல்துறையினர், ஜொந்தாமினர் என களத்தில் பலர் குவிக்கப்பட்டுள்ளனர்.
எதனால் தீப்பற்றியது என தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், இந்த சம்பவத்தில் மேலும் 14பேர் காயமடைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள். அவர்களில் ஒருவருடைய நிலை கவலைக்கிடமாக உள்ளது.
சுமார் 170 தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்தில் தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், அவர்களில் இரண்டு பேரும் காயமடைந்துள்ளார்கள். இந்த கோர விபத்து தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

