தவறவிடப்பட்ட 6 பவுண் தாலிக்கொடியை உரியவரிடம் ஒப்படைத்த வெதுப்பக உரிமையாளர்! (படங்கள்)

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் உள்ள தீன்சுவை வெதுப்பகத்திற்கு கடந்த சனிக்கிழமை முள்ளியவளையில் இருந்து கேக் வாங்க வந்த தம்பதிகளின் கழுத்தில் இருந்த தாலிக்கொடி தவறி வீழ்ந்துள்ளது.

இதனை எடுத்த வெதுப்பக உரிமையாளர் சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு வணிகர் சங்க தலைவர் நவநீதனுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

தொலைத்தவர்கள் தேடிவரும் வரை அதனை பத்திரமாக வைத்திருக்குமாறு வணிகர் சங்க தலைவர் தெரிவித்துள்ள நிலையில் தாலிக்கொடியினை தொலைத்தவர்கள் வெதுப்பகத்திற்க வருகைதந்து தமது நிலமையினை எடுத்துரைத்துள்ளார்கள்.

சம்பவ இடத்தில் வணிகர் சங்க தலைவர் முன்னிலையில் அடையாளங்கள் உறுதிப்படுத்தப்பட்டு வெதுப்பக உரிமையாளரினால் உரியவர்களிடம் ஒப்படைக்க்பபட்டுள்ளது.

வெதுப்பகத்தில் தவறவிடப்பட்ட பெறுமதியான தாலிக்கொடி தங்களுக்கு மீளவும் கிடைத்ததையிட்டு வெதுப்பக உரிமையாளருக்கும் வர்த்தக சங்கத்தினருக்கும் குறித்த குடும்பத்தினர் நன்றிகளைத் தெரிவித்துள்ளார்கள்.

Previous Post Next Post