மூன்றரை வயதுக் குழந்தையை கழுத்து நெரித்துக் கொலை செய்து விட்டு தற்கொலை செய்த தாயின் கள்ளக் காதலன்! (படங்கள்)

மூன்றரை வயதுக் குழந்தையை உறக்கத்திலேயே கழுத்தை நெரித்துக் கொலை செய்த 21 வயது இளைஞன் தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இச் சம்பவம் காலி மாவட்டம், மெகத்தன்ன பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த குழந்தையின் தாயின் கள்ளத் காதலனே இக் கொலையைச் செய்ததாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மூன்றரை வயதான எம்.நெதும் சஸ்ஸர என்ற குழந்தையும் 21 வயதான இளைஞனுமே இவ்வாறு உயிரிழந்தவர்களாவர்.

உயிரிழந்த குழந்தையின் தாய் கணவனைப் பிரிந்து, இறந்த இளைஞனுடன் ஒன்றாக வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.

நேற்றைய தினம் தாய் தனது 10 வயது பிள்ளையை பாடசாலையில் விட்டு விட்டு வீடு திரும்பும் வேளையில் இக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Previous Post Next Post