குடும்ப வறுமை! வேலைக்குச் சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கிப் பலி!! (வீடியோ)

முல்லைத்தீவு விசுவமடுபகுதியில் இரும்பு ஒட்டும் கடையில் மின்சாரம் தாக்கியதில் சிறுவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் மூங்கிலாறு வடக்கு உடையார் கட்டுப்பகுதியில் வசித்துவரும் தேவன் கபிலன் (வயது-17) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

குடும்ப வறுமை காரணமாக விசுவமடு 10 ஆம் கட்டைப்பகுதியில் உள்ள இரும்பு ஒட்டும் கடை ஒன்றில் வேலை செய்து வந்தார்.

தொழில் கருவிக்கு நேற்றுக் (14) காலை மின்இணைப்பினை இணைக்கும் முயற்சியினை மேற்கொண்டபோது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தினை தொடர்ந்து சிறுவனின் உடலம் தர்மபுரம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு உடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனை எடுத்து செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
Previous Post Next Post