காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக் களத்தின் முன்னணி செயற்பாட்டாளர் மீது கத்தி குத்து!

காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக் களத்தின் முன்னணி செயற்பாட்டாளர்களில் ஒருவரும் சமூக ஊடக செயற்பாட்டாளருமான டிலான் சேனாநாயக்கவை இரு நபர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளனர்.

நுகேகொட, பகொட வீதியில் அமைந்துள்ள அவரது வீட்டிற்கு வந்த இருவர் அவரை தாக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் காயமடைந்த டிலான் சேனாநாயக்க களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலில் அவரது கால் மற்றும் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post