இலங்கையைச் சேர்ந்த வரதலெட்சுமி ஷண்முகநாதன் என்ற பெண் கனடாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் இரண்டாவது முதுகலைப் பட்டப்படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார் .
கனடாவில் வசித்து வரும் இலங்கையை பூர்விகமாக கொண்ட தமிழ்ப் பெண்ணான வரதா சண்முகநாதன் (87) யோர்க் பல்கலைக்கழகத்தில் (York University) தனது இரண்டாவது முதுகலைப்பட்டம் பெற்றுள்ளார்.
2019 ஆம் ஆண்டு தனது பட்ட படிப்பைத் தொடங்கிய இவர் நவம்பர் 2 திகதி 4,000 மாணவர்களுடன் தனது இரண்டாவது முதுகலைப் பட்டத்தை பெற்றுள்ளார்.
இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள வேலனை (Velanai) கிராமத்தில் பிறந்த வரதலெட்சுமி, உலகிலுள்ள நான்கு கண்டங்களில் மாணவர்களுக்கு கல்வி கற்பித்துள்ளார்.
இந்நிலையில், ஒன்ராறியோ மாநில சட்டமன்றத்தில் குறித்த பெண் கௌரவிக்கப்பட்டுள்ளதுடன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுந்து நின்று கைதட்டி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளனர்.