யாழில் கடை உடைத்துக் கொள்ளயிட்ட கணவனும், மனைவியும்!

யாழ்.வளலாய் பகுதியில் உள்ள கடை ஒன்றினை உடைத்து அங்கிருந்த பொருட்களை திருடிய குற்றச்சாட்டில் கணவனும், மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்றொழில் உபகரணங்கள் விற்பனை செய்யும் கடை ஒன்று உடைக்கப்பட்டு சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டது.

சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார்,

அப்பகுதியை சேர்ந்த கணவன், மனைவியை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் திருடப்பட்ட பொருட்கள் சில அவர்களிடமிருந்து மீட்கப்பட்டது.

கணவன் மனைவி இருவரையும் தொடர்ந்தும் பொலிஸ் காவலில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Previous Post Next Post