யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த பாரவூர்தி-முச்சக்கரவண்டி விபத்து! இருவர் உயிரிழப்பு!! (படங்கள்)

பாதெனிய அனுராதபுரம் பிரதான வீதியில் தம்புத்தேகம கொன்வெவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று (27) மாலை இடம்பெற்ற குறித்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக தம்புத்தேகம தலைமையக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கல்கமுவ, மஹகல்கடவல பிரதேசத்தை சேர்ந்த 21 வயதான தேஷான் மலிந்த மற்றும் கல்கமுவ, களுந்தேவ பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய இருவருமே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பாரவூர்தி ஒன்றும் தலாவயிலிருந்து தம்புத்தேகம நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியும் தம்புத்தேகம கொன்வெவ பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

பிரபல சவர்கார தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள் நால்வரரும் தமது பணியை முடித்துக் கொண்டு முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தபோதே விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் படுகாயமடைந்த நால்வர் தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும், படுகாயமடைந்த மற்றைய இருவர் தம்புத்தேகம வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் தம்புத்தேகம தலைமையக காவல் பிரிவின் போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post