“பிரான்ஸில் இஸ்லாமியர்கள் வசிப்பதை விரும்பவில்லை” துப்பாக்கிச் சூடு நடத்திய நபரின் பிண்ணனி!!

நேற்று வெள்ளிக்கிழமை காலை பரிசில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் மூவர் கொல்லப்பட்டனர். மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர். கொலையாளி காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், அந்நபர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

Willam M எனும் 69 வயதுடைய நபரே கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூட்டினை மேற்கொண்டுள்ளார். பரிஸ் 10 ஆம் வட்டாரத்தின் Rue d'Enghien வீதியில் இடம்பெற்ற இத்துப்பாக்கிச்சூட்டினை அடுத்து, குறித்த கொலையாளி உடனடியாக கைது செய்யப்பட்டார். குறித்த கொலையாளி ‘இனவாதம்’ காரணமாக மேற்படி துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூட்டுக்கு 45 mm கலிபர் வகை துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளது. ‘அரை -தானியங்கி கோல்ட்’ (semi-automatique Colt) வகையைச் சேர்ந்த குறித்த துப்பாக்கியுடன் 25 துப்பாக்கி ரவைகளும் கொலையாளியிடம் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Versailles (Yvelines) நகரில் உள்ள துப்பாக்கிச்சூடு க்ளப் ஒன்றில் அங்கத்தவராக உள்ள நண்பர் ஒருவரிடம் மேற்படி துப்பாக்கியை கொலையாளி வாங்கியுள்ளார்.

துப்பாக்கிச்சூட்டினை மேற்கொண்டுவிட்டு அதேவீதியில் உள்ள அழகு நிலையம் ஒன்றுக்குள் நுழைந்துள்ளார். பின்னர் காவல்துறையினர் மிக விரைவாக கொலையாளியைக் கைது செய்தனர்.

குர்திஷ் இன மக்களை (துருக்கி, வடக்கு மற்றும் மேற்கு ஈராக், கிழக்கு சிரியா போன்ற நாடுகளில் வசிக்கும் இஸ்லாமியர்கள்) இலக்கு வைத்து மேற்படி துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. Rue d'Enghien வீதியானது குர்திஷ் இன மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும்.

கொலையாளி தீவிர வலது சாரியம் பேசும் நபர் எனவும், பிரெஞ்சு மக்களைத் தவிர வேறு இன மக்கள் குறிப்பாக இஸ்லாமியர்கள் பிரான்சில் வசிப்பதை விரும்பாத இனவாதம் கொண்ட நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post