சாரதி தூங்கியதால் கடலுக்குள் பாய்ந்த கார்! (படங்கள்)

மாத்தறை தங்காலை பிரதான வீதியில் பயணித்த கார் ஒன்று இன்று பிற்பகல் வெல்லமடம பகுதியில் உள்ள கடலில் வீழ்ந்துள்ளது.

சாரதி தூங்கியதால் இவ் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

ருஹுனு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரான இவர் காலியை வசிப்பிடமாகக் கொண்ட இவர் சுமார் 50 வயதுடையவர் என தெரிய வந்துள்ளது.

மேலும் இவ் விபத்தில் காயமடைந்த விரிவுரையாளர் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
Previous Post Next Post