பல்கலைக்கழகத்துக்குள் மதுபோதையில் அட்டகாசம் செய்த யாழ்ப்பாண மாணவன்!

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட சிரேஷ்ட மாணவனொருவன் முதலாம் வருட மாணவனைத் தாக்கிய சம்பவம் ஒன்று, பதிவாகியுள்ளது. பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விடுதிக்குள் இத்தாக்குதல் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

சிரேஷ்ட மாணவன் மதுபோதையில் வந்து, முதலாம் வருட மாணவனைத் தாக்கிய நிலையில் காயமடைந்த மாணவன் பேராதனை வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதலுக்கு இலக்கான முதலாம் வருட மாணவன் நோட்டன்பிரிட்ஜ் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தாக்குதல் நடத்திய மாணவன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்றும் பேராதனைப் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் ​பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் பேராதனை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Previous Post Next Post