யாழிலிருந்து வெளிவரும் பத்திரிகையின் ஆசிரியருக்குக் கொலை மிரட்டல்! (ஓடியோ)


யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றின் ஆசிரியர் ஒருவருக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் ஒருவர் தொலைபேசி ஊடாகக் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பத்திரிகை ஆசியரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட விரிவுரையாளர் இம் மிரட்டலை விடுத்துள்ளதுடன் தரக்குறைவாகப் பேசியாதாகத் தெரிவித்து குறித்த தொலைபேசியின் உரையாடல் அடங்கிய ஒலி வடிவம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

நேற்றைய தினம் வெளியான பத்திரிகைச் செய்தி ஒன்றின் அடிப்படையிலேயே குறித்த உரையாடல் இடம்பெற்று இறுதியில் கொலைமிரட்டலில் முடிவடைந்துள்ளது.

குறித்த தொலைபேசி உரையாடலின் ஒலி வடிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post