மூன்று வாகனங்கள் மோதி விபத்து! 75 மீற்றர் தூரம் ஆளில்லாமல் பயணித்த மோட்டார் சைக்கிள்!! (வீடியோ)

பளை, முல்லையடி பகுதியில் நேற்று மூன்று வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் இரு வயோதிபர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி மோட்டார் சைக்கிளில் இரு வயோதிப தம்பதியினர் பயணித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளின் பின்னால் பயணித்த பிக்கப் ரக வாகனம் வலப்பக்கமாக முந்திச் செல்ல முற்பட்ட போது, மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளியது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த வயோதிபத் தம்பதியினர் தூக்கி வீசப்பட்ட நிலையில், மோட்டார் சைக்கிள் சாரதி இல்லாமல் சுமார் 75 மீற்றர் வரை முன்னோக்கி பாய்ந்து பயணித்ததுள்ளது.

இவ்வேளை கிளிநொச்சி பகுயில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி எதிர்த் திசையில் பயணித்த கப் ரக வாகத்துடன் குறித்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.

இதனால் மோட்டார் சைக்கிளும், கப் வாகனமும் பாரியளவில் சேதங்களுக்குள்ளானது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த வயோதிபத் தம்பதியின் தலை மற்றும் கை, கால்களில் பலத்த காயங்களுடன் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்துத் தொடர்பில் பளை மொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Previous Post Next Post