ஜேர்மன் பெர்லினில் தமிழ்க் குடும்ப்ப பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழப்பாணத்தை சேர்ந்த 42 வயதான பெண் ஒருவரே இவ்வாறு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகின்றது. கணவனால் கடுமையாகத் தாக்கப்பட்டதை அடுத்தே பிளேற்றினால் வயிறு மற்றும் கையை அறுத்த தற்கொலைக்கு முயற்சி மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதிர்ச்சியடைந்த பெண்ணின் சிறுவயதுப் பிள்ளைகள் பொலிசாருக்கு சம்பவம் தொடர்பில் அறிவித்துள்ளனர்.
விரைந்து வந்த பொலிசார் குறித்த பெண்ணை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாகத் தெரியவருகின்றது. வைத்தியசாலையில் பெண்ணைப் பரிசோதித்த மருத்துவர்கள் பெண்ணின் தலை மற்றும் முதுகுப் பகுதிகளில் கண்டல் காயங்கள் இருந்ததை பொலிசாருக்கு அறிவித்துள்ளனர்.
பொலிசாரின் விசாரணையில் கணவரால் தாக்கப்பட்டதாக தான் பெண் கூறியதையடுத்து கணவர் கைது செய்யப்பட்டதாகத் தெரியவருகின்றது.
குறித்த பெண்ணின் கணவர் மதுவுக்கு அடிமையானவர் என குறித்த பெண்ணின் நண்பிகள் வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.