
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த காலங்களை விட உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனை இளம் சமூகத்தினர் மத்தியில் அதிகரித்துள்ளது.
சில தரப்புக்கள் இளம் பெண்களை இலக்கு வைத்தும் இதனை விநியோகித்து வந்துள்ளன. அவ்வாறு உயிர்கொல்லிப் போதைப்பொருளுக்கு அடிமையான இளம் பெண்கள், அவற்றைத் தொடர்ந்து கொள்வனவு செய்வதற்காகப் பாலியல் துர்நடத்தைகளில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ். மாவட்டத்தில் கடந்த ஆண்டு (2022) ஏழு பெண்கள் இவ்வாறு கண்டறியப்பட்டுள்ளனர் என்று தெரியவருகின்றது.
"உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனையை ஒழிக்க வேண்டும் என்பதுடன், இவ்வாறான கலாசாரப் பிறழ்வுகளை ஆரம்பத்திலேயே தடுக்கவேண்டும்" - என்று சமூகஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.