
முகாமையாளர் குருநாகலையைச் சேர்ந்தவரென்றும் பெண்கள் இருவரும் கோப்பாய்,பயாகலை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் இருவரும் 23, 32 வயதுகளை உடையவர்கள் என்றும் ஆரம்பவிசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸார் கிடைத்த இரகசிய தகவலைக்கொண்டு நீதிமன்ற உத்தரவுடன் இச் சுற்றிவளைப்பை மேற்கொண்டதாகவும், பொலிஸ் அதிகாரி ஒருவர் இந் நிலையத்தின் சேவையை பெற்றுக் கொள்ள மாறுவேடம் பூண்டு இந்த ஆயுர்வேத நிலையத்திற்கு சென்றதன் மூலம் இவர்களை முறையாக கைது செய்ய முடிந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களை மாஜிஸ்திரேட் முன் முன்னிலப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.