யாழ்..கிளிநொச்சிப் பெண்கள் ஓமானில் விற்பனை! தப்பி வந்த பெண் அதிர்ச்சித் தகவல்!! (வீடியோ)

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா மற்றும் திருகோணமலைப் பகுதிகளைச் சேர்ந்த இள வயதுப் பெண்கள் ஓமான் நாட்டில் லட்சக்கணக்கான பணத்துக்கு விற்பனை செய்யப்படுவதாக அங்கிருந்து வந்த பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் ஓமான் நாட்டில் தான் பல சித்திரவதைகளை அனுபவித்ததாகவும், அதேபோன்று அங்கிருக்கும் பெண் பிள்ளைகளும் சித்திரவதைகளை அனுபவிக்கின்றனர் என்றும் தெரிவித்த யுவதி, அவர்களைக் காப்பாற்றுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் தாங்கள் செலுத்திய பணத்தை மீளப் பெற்றுத் தருமாறும், முகவர்களைகளைக் கைது செய்யுமாறும் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Previous Post Next Post